பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கீதை காட்டும் பாதை ஒருநாள் சந்தனு மன்னன் கங்கைக் கரையின் ஒரமாகச் செல்லும் போது, மீனவர்கள் குடியிருப்பி லிருந்த பகுதியிலிருந்து நாற்றம் வந்தது. அந்தத் திசையில் திரும்பினான். அங்கே அழகே வடிவான மீனவப் பெண் ஒருத்தி யைப் பார்த்து விட்டான். பார்த்த உடனே அவளை அடைய வேண்டும் என்று எண்ணினான். அரசன் அல்லவா, சற்றும் தாமதிக்காமல், உடனே சென்று மீனவப் பெண்ணின் தந்தையிடம் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பும் ஆசையை வெளியிட்டான். மீனவன் உலக நடப்புப் புரிந்தவன். அரசர் களின் போக்கும் தெரிந்தவன். மிக எச்சரிக்கையுடன் பேசினான். - மன்னவன் நீ என் மகளைப் பார்த்து ஆசைப் பட்டதும் தவறில்லை. அவளை மனைவியாக்கிக் கொள்ள விரும்பியதும் தவறில்லை. ஆனால் என் மகள் ஒரு நாட்டு மன்னனின் வெறும் போகப் பொருளாக இருக்க நான் ஒப்ப மாட்டேன். அவள் பட்டத்து ராணி என்ற உரிமையுள்ளவ ளாக இருக்க வேண்டும்.