பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 13 அது மட்டுமல்ல, அவள் வயிற்றுப் பிள்ளைகளே இந்தப் பாரத நாட்டை ஆள வேண்டும். என் பேரர்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தர நீ ஒப்புக் கொண்டால், இன்றே இப்பொழுதே என் மகளை உன்னுடன் அனுப்பத் தயார் என்றான். மீனவன் போட்டபோட்டில் மன்னவன் அசந்து போனான். அவ்வளவு அழகான பெண்ணை, மனத்துக்கு இனிய கருவாட்டு நாற்றம் வீசுகின்ற உடலைப் பெற்ற மச்சகக்தி' என்ற அந்தப் பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அரண்மனை சென்றான். ஏக்கம் தூக்கத்தைக் கெடுத்தது. துயரம் உயிரை வாட்டியது. உடல் சோர்ந்தது; முகம் கவிழ்ந்தது. ஆக்கமான செயல்களில் ஊக்கமாக ஈடுபட முடிய வில்லை. பட்டம் சூட்டிக் கொள்ளத்தக்க வளர்ந்த இளை ஞனாக ஒரு மகன் இருப்பது அவன் மனத்தை வாட்டிக் கொண்டிருந்தது. தந்தையின் வாட்டத்தைக் கவனித்தான் தனயன். தந்தை காரணம் சொல்லவில்லை; கூடச் சென்றவர்கள் மூலம் அறிந்தான். நேரே மீனவனிடம் சென்றான். உன் மகள் வயிற்றுப் பிள்ளைகளுக்கே பட்டம் சூட்டும் உரிமை கொடுக்கிறேன். எனக்குப் பட்டம்