பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கீதை காட்டும் பாதை வேண்டாம். என் தந்தையின் மகிழ்ச்சியே முக்கியம் என்றான். நீ நல்லவன். விட்டுக் கொடுத்துவிடுவாய். உன் மக்கள் என் பேரர்களோடு சண்டைக்கு வந்து ஆட்சியைப் பறித்துக் கொள்வார்களே என்று தன் அச்சத்தைக் கூறினான் செம்படவன். அந்த அச்சமும் உனக்கு வேண்டாம். நான் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றான். தன் தந்தையின் சிற்றின்ப வேட்கையைத் தீர்த்து வைக்க தன் வாழ்வையே பணயம் வைத்துச் சபதம் செய்த போது, அதைப் பாராட்டித் தேவர்கள் வானிலிருந்தே பூமாரி பொழிந்தார்களாம். இந்தச் சபதம் பீஷ்ம சபதம் என்று போற்றப் பட்டதாம். மீனவன் மனநிறைவோடு தன் மகளை அனுப்பி வைத்தான். பீஷ்மன் கடைசிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. சந்தனு மன்னனுக்கும் மச்சகந்திக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்களில் ஒருவன் பகைவனால் இறந்தான். மற்றொருவன் சந்ததியில்லாமலே இறந்தான். மீனவன் கனவு அவன் பேரர்களோடு முடிந்து விட்டது.