பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 15 அரச வம்சம் சந்ததியில்லாமல் போகலாமா? மீனவப் பெண்ணாயிருந்து அரசியான மச்சகந்தி சந்ததி வளர வழி செய்தாள். - பீஷ்மரை அழைத்து, தம்பியின் மனைவிகள் இரண்டு பேருக்கும் பிள்ளைவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். அதாவது அவர்களைப் புணரும்படி கேட்டுக் கொண்டாள். உங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்கை நான் ஒளிவு மறைவாகக்கூட மீற மாட்டேன் என்று உறுதி யாகக் கூறிவிட்டார் பீஷ்மர். மச்சகந்தி முயற்சியை விடவில்லை. சந்தனுவை மணப்பதற்கு முன்னால், வேறொருவர் மூலம் தனக்குப் பிறந்து காட்டில் திரிந்து கொண்டிருந்த தன் மகன் வியாசனை அழைத்து, தன் மருமகள் களுக்குப் பிள்ளைவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். அவ்வாறே வியாசன் சம்மதித்து இரண்டு பெண் களையும் சேருகிறான். மூத்தவள் காட்டு முனியான வியாசன் தன்னைப் புணரும் போது பயந்து கண்ணை மூடிக் கொள் கிறாள். அதனால் அவளுக்குப் பிறக்கும் மகன் குருடனாகப் பிறக்கிறான். - குழந்தைப் பேறு மருத்துவர்கள் ஆராய வேண்டிய செய்தி இது