பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கீதை காட்டும் பாதை இரண்டாவது மருமகளும் வியாசன் சேரும் போது அச்சத்தோடு இருக்கிறாள். அதனால் அவளுக்குப் பிறக்கிறவன் நோயாளியாகப் பிறக் கிறான். சந்தனு சந்ததியில்லாமல் நரகத்தில் விழுவானே என்பதைத் தடுப்பதற்காக - அந்த இரண்டு மருமகள் களும் - கட்டாயமாக ஒரு காட்டு முனிவனால் கற்பழிக்கப்பட்டபோது அடைந்த வேதனையை - அச்சத்தை - மருட்சியை நினைத்துப் பார்த்தாலும் நெஞ்சு வேகிறது. இரண்டு பிள்ளைகளும் சொட்டையாய்ப் போகவே, மறுபடியும் மச்சகந்தி வியாசனை அழைத்து இரண்டாவது மருமகளை மறுபடி புணர்ந்து ஒரு ஒழுங்கான பிள்ளையைக் கொடுக்கும் படி கேட்கிறாள். வியாசன் வருகிற போது, அவனைக் கண்டு (அருவருப்பினால்) அச்சம் கொண்ட இரண்டாவது மருமகள் தன் வேலைக்காரியை அனுப்புகிறாள். வேலைக்காரி வியாசனோடு கூடி மகிழ்கிறாள். அவளுக்குக் குறையற்ற பிள்ளை பிறக்கிறது. வியாசனுக்கு முதல் மருமகள் மூலம் பிறந்த பிள்ளைதான் குருடனான திருதராட்டிரன். வியாசனுக்கு இரண்டாவது மருமகள் மூலம் பிறந்த பிள்ளைதான் நோயாளியான பாண்டு. வியாசனுக்கு வேலைக்காரியின் மூலம் பிறந்த பிள்ளைதான் விதுரன்.