பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 17 குருட்டுப் பிள்ளை அரசனாகக் கூடாது என்று திருதராட்டிரன் ஒதுக்கப் படுகிறான். விதுரன் குறைவற்ற பிள்ளையாய்ப் பிறந்தும், வேலைக்காரி மகனாக இருந்ததால் ஆட்சி செய்யத் தகுதியில்லாதவனாகிறான். நோயாளியாகப் பிறந்த பாண்டுவே ஆளத் தகுதியுடையவனாகின்றான். சாத்திரங்கள் - அரசவையில் செல்வாக்குப் பெற்றவர்கள் - முனிவர்கள் - இவர்கள் ஏற்பாடு செய்த நியாயங்கள் - பாண்டுவுக்கே ஆட்சியைப் பெற்றுத் தருகின்றன. பாண்டுவுக்கு அவன் மனைவி குந்தியும் மாத்ரி யும் வேறு யாராரோ தேவர்களுடன் கூடிப் பெற்ற பிள்ளைகள் பாண்டவர்கள் என்று பெயர் பெறு கிறார்கள். ஆரிய சாத்திரங்கள் விசித்திரமானவை. நான் காவது சாதியைச் சேர்ந்த மச்சகந்திக்கு தன்னை மணந்த சந்தனுவின் மூலம் பிறக்காத - யாரோ ஒரு வரால் தனக்குப் பிறந்து காட்டில் திரிந்து கொண் டிருந்த வியாசன் என்ற மகனுக்கும்,-சந்தனுவுக்கும் தனக்கும் பிறந்த மகன்களின் மனைவிமார்களுக்கும் பிறந்த புத்திரர்களிலே - மூத்தவன் திருதராஷ்டிரன் குருடன் என்பதால் விலக்கப் படுகிறான்.