பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கீதை காட்டும் பாதை போர் செய்து வீழ்த்துவது கடினம். போரின்றி, வெட்டும் இன்றிக், குத்தும் இன்றி ஆட்சியைக் கைப் பற்றச் சூதாடலாம் என்று கருத்துரைக்கிறான். தருமன் சூது ஆடுவதில் மோகம் உள்ளவன்; சகுனியோ அந்தக் கலையில் வல்லவன். தருமன் சூதாட வருகிறான். தோற்கிறான். நாடு மிக எளிதாகத் துரியோதனன் கைக்கு வருகிறது. துரியோதனனின் நியாய வாதங்களை ஏற்றுக் கொள்ளாத பெரிய மனிதர்கள் சூதினால் அவன் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்கிறார்கள். சூதின் வெற்றிக்கு எல்லாரும் கட்டுப்பட்டவர் களாக இருக்கிறார்கள். அறநூலைக் காட்டிலும் சூதுக்கு அதிக மதிப்பு இருந்திருக்கிறது. தோற்றவர்களும் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார்கள். பதின்மூன்று ஆண்டுகள் காட்டிலே தலைமறை வாகத் திரிந்தபின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும்படி கேட்கிறார்கள். துரியோதனன் மறுக்கிறான். எனவே அவர்கள் போருக்கு அணியப் ஆகிறார்கள். போர்செய்து நாட்டைக் கைப்பற்ற முடிவெடுக்கிறார்கள்.