பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 21 குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களும் குறுநில மன்னர்களும் அதிகாரிகளும் இரு அணிகளாய்ப் பிரிகிறார்கள். போர் தொடங்கியது. அதன் தொடக்கத்தில் தான் அர்ச்சுனன் களத் திலே இருபுறமும் நிற்பவர்களைப் பார்க்கிறான். எல்லாரும் உறவினர்கள். உறவினர்கள் வீண் அரசியல் பகையால் செத்தொழிய வேண்டுமா? ஒருவரை யொருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டு மாண்டு மடிய வேண்டுமா? பகை எண்ணம் கொண்ட துரியோதனனே ஆளட்டும். இதற்காக இருதரப்பிலும் பலர் மாண்டு மடிய வேண்டாம். இப்படி ஒரு நல்ல எண்ணம். மனிதாபிமானம் - ஆன்ம நேயம் அவனுக்கு உண்டாகிறது. அந்தக் காலத்தில் இதயத்தில் பூத்த நல்லெண் ணத்தை அடிப்படையாகக் கொண்டு போரைத் தவிர்த்திருக்கலாம். விட்டுக் கொடுப்பதன் மூலம் இரத்தக்களரி ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த நல்ல எண்ணத்தை மாற்றுகிறான் கண்ணன். அர்ச்சுனன் எண்ணத்தை மாற்றி அவனைப் போருக்கு ஆயத்தப் படுத்துகிறான். இதற்காக அவன் கையாண்ட கருத்துரைதான் பகவத் கீதை என்று வழங்கப் படுகிறது.