பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2? கீதை காட்டும் பாதை பகவத் கீதையை ஆராயும் போது கீழ்க்கண்ட மூன்று கருத்துக்களை, நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அர்ச்சுனனைப் போருக்கு அணியப்படுத்த கண்ணன் கையாண்ட வேதாந்தக் கருத்துக்கள். அடுத்து கீதையில் அடிக்கடி கூறப்படும் ஆன்மிக வாதம். இறுதியாக, கண்ணன் தன்னைக் கடவுளாக அல்லது பிரம்மமாக வெளிப்படுத்திக் கொள்ளுதல். இக் கருத்துக்களிடையே மாந்தர் வாழ்வுக் கென்று காட்டப்படும் வழிமுறைகள் அல்லது நெறி முறைகள். இவற்றைப் பற்றி ஆராயும் போது, பொதுவாக கீதை பற்றி வழங்கப்படும் கருத்துக்கள் எந்த அளவு சரியானவை என்று கணிக்கலாம். பகவானே சொல்லி விட்டான். அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அதை ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? மேலும், விளம்பரமான பெரிய மனிதர்கள் எல்லாரும் ஒன்றைப் போற்றிப் பேசுகிறார்கள் என்பதால் அது உயர்ந்த வழிகாட்டி ஆகிவிடுமா? நியாயம் என்பது எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். .