பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 23 இந்த அடிப்படையில் தான் பகவான் சொன்ன தாகக் கூறப்படும் பகவத் கீதையை நாம் ஆராயப் போகிறோம். இதிலே அறிவுப் பார்வை (ஞான திருஷ்டி) வேண்டும். அது பகுத்தறிவுப் பார்வையாக இருப்பது தவறாகாது. திருதராட்டிரனுக்குக் கண் தெரியாது - பிறவிக் குருடன். போர்க்களத்தில் நடப்பவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விழைகிறான். இதற்காக சஞ்சயன் என்ற அமைச்சனைத் தன் அருகிலே இருந்து அவ்வப்போது போர்க்களச் செய்திகளை தனக்குச் சொல்லும்படி ஏற்பாடு செய் தான். வியாசர் சஞ்சயனுக்கு தொலைவில் நடப் பதை அறியும் ஞான திருஷ்டியை வழங்குகிறார். அரண்மனைக்குள்ளே நான்கு புறமும் சுவர்கள் உள்ள மண்டபத்துக்குள்ளே கண்ணுள்ள சஞ்சயனும் கண்ணில்லாத திருதராட்டிரனும் அமர்ந்துள்ளார்கள். போர்க்களத்திலிருந்து தூதர்கள் மாறி மாறி வந்து செய்தி சொல்லவில்லை. ஏனென்றால், சஞ்சயன் ஞான திருஷ்டி பெற்றவன். அதாவது உலகில் எங்கு எது நடந்தாலும் நேருக்கு நேர் பார்ப்பது போல் அவனுக்குத் தெரியும்.