பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கீதை காட்டும் பாதை அந்த ஞான திருஷ்டியில் போர்க்களத்தில் நடப் பவைகளைக் கண்டு திருதராட்டிரனுக்கு தெரிவித்துக் கொண்டு வருகிறான். காண்பது மட்டுமல்ல; அங்கு ஏற்படும் ஒலிகளும் பேச்சுக்களும் கூட ஞான திருஷ்டியிலே காதில் கேட்கும். எனவே சஞ்சயன் அர்ச்சுனனும் கண்ணனும் பேசிக் கொண்டவைகளைத் திருதராட்டிரனுக்கு எடுத்துச் சொல்லுகிறான். . திருதராட்டிரன் கேட்கக் கேட்க, கேட்ட கேள்வி களுக்கு, நேரே பார்த்தது போல், கேட்டது போல் சஞ்சயன் கூறி வருகிறான். இந்த ஞான திருஷ்டியை ஏற்றுக் கொண்ட பிறகு தான் நாம் பகவத் கீதையை அறியமுடியும். கண்ணில்லாதவனுக்கு கண்ணுள்ளவன் கண் காணாத இடத்திலே நடந்ததைக் கண்ணுக்கு நேரே பார்த்ததாகச் சொல்வதை நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்ப வேண்டும். நாம் அறிவுப் பார்வையை மூடிவிட்டு ஞான திருஷ்டியை நம்பி னால் தான் பகவத் கீதையை அறிய முடியும். ஞானம் என்றால் அறிவு. திருஷ்டி என்றால் பார்வை. ஞான திருஷ்டி என்றால் அறிவுப் பார்வை, அதாவது எதையும் ஆராய்ந்து பார்க்கும் பார்வை. இதுதான் உண்மையான பொருள். ஆனால் பகவத்