பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் போரின் அடிப்படை 25 கீதையில் கூறப்படும் ஞான திருஷ்டி என்பது தொலை தூரத்தில் நடப்பதைக் காணக் கூடிய தூரப் பார்வை என்றாகிறது. இதை வைத்துக் கொண்டு பழமை வாதிகள், அந்தக் காலத்திலேயே வியாசமுனிவர் டெலிவிஷ னைக் கண்டு பிடித்துவிட்டார். டெலிவிஷன் மூல மாகத் தான் சஞ்சயன் போர்க்களக் காட்சிகளைப் பார்த்தான். நம் பழங்கால சாத்திரங்களைத் திருடிக் கொண்டு போய்ப் பார்த்துத் தான் வெள்ளைக்காரன் டீவியைச் செய்யக் கற்றுக் கொண்டான் என்று சொல்லத் தயங்கமாட்டார்கள். விஞ்ஞானம் எதையும் பாரத ஞானமாகப் பார்க் கும் நாட்டுப் பற்றின் விளைவு என்று இதைக் கருதலாம். ஆனால் அந்த வியாச பகவான் கண் இல்லாத திருதராட்டிரனுக்கே இந்தத் தொலை நோக்கியைக் கொடுத்திருக்கலாம். சஞ்சயன் என்ற அமைச்சனுக்கு அருள் பாலித்த வியாசர் தன் மகனுக்கு, தன்னாலேயே குருடனாகப் பிறந்துவிட்ட திருதராட்டிரனுக்கு அருள் புரிய மன மில்லாமல் போனது ஏனோ? தெரியவில்லை. ஞான திருஷ்டி என்ற சொல்லைக் கொச்சைப் படுத்தி - அறிவு நோக்கு என்று இருக்க வேண்டிய 岔一2