பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கீதை காட்டும் பாதை பொருளை மாற்றி, தூரத்துப் பார்வை என்ற பொருத்தமற்ற பொருளைக் கூறிக் கீதை காட்டப் படுகிறது. பகவத் கீதை பதினெட்டு அத்தியாயங்களை யுடையது. முதல் அத்தியாயம் அர்ச்சுனன் துயரத்தை விளக்குகிறது. மற்ற அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் ஒரு யோகத்தை விளக்குகிறது. துயர யோகம் என்று பெயரிட்டு, இதையும் சேர்த்துப் பதினெட்டு யோகங்களைக் குறிப்பிடு வதும் உண்டு. பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பகவத் கீதையும் பதினெட்டு அத்தியாயங்களை உடையதாய் இருக்கிறது. இது தானாக அமைந்த பொருத்தமா! இல்லை கருதி யமைக்கப் பட்டதா என்பது தெரியவில்லை. இனி நாம் கீதை காட்டும் பாதையை ஆய்வு செய்யலாம்.