பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் பகவத் கீதையின் தலைப்பு ஒவ்வொன்றும் யோகம் என்று அழைக்கப் படுகின்றது. யோகம் என்ற சொல் பொது வழக்கில் அதிர்ஷ் டம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கும் யோகம் என்று வழங்குவ துண்டு. துறவிகளை யோகி என்று அழைக்கும் வழக்கமும் இருப்பதைப் பார்க்கிறோம். சைவ சமயத்தில் இறை வழிபாடு நான்கு நிலை களாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. சரியை கிரியை யோகம் ஞானம் என்று இவை வழங்கப் படுகின்றன. சரியை என்பது பூசை செய்தல், பூசைக்கு வேண்டிய பணிகளைச் செய்தல் என்றும் கிரியை என்பது இறை யுணர்வோடு திருப்பணி களைச் செய்தல் என்றும்