பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ைேத காட்டும் பாதை யோகம் என்பது தியானத்தில் இருந்து மனத்தை இறைவனோடு கூட்டி ஒன்றாய் இருத்தல் என்றும் ஞானம் என்பது இறைநிலை தெளிந்து பழக்க வழக்கங்களுக்குச் சிறப்புக் கொடாது பொது நிலை யில் இருத்தல் என்றும் பொருள்படும். இமயம், நியமம், இருப்பு, உயர்நிலை, LDGUT ஒழுக்கம், தாரணை, தியானம், சமாதி என்று யோக நிலை எட்டு என்றும் கூறுவர். பகவத் கீதையில் யோகம் என்று குறிப்பிடுவது இந்த நிலைகளை விளக்குவதாகக் காணப்பட வில்லை. பகவத் கீதை இதே கருத்துக்களைத் தான் பேசுகிறது என்றாலும் யோகம் என்ற சொல் அதற் குரிய பொருளோடு பேசப்படவில்லை. சாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், சந்நியாச யோகம் என்று பல யோகங்கள் பேசப்படு கின்றன. . யோகம் என்ற சொல் இங்கே ஏதோ பெரிய புதுமையான - அரிதான செய்திகளைச் சொல்லப் பயன்படுகிறது என்ற மயக்கத்தை ஏற்படுத்தி னாலும் சந்நியாசத்தைப் பற்றிச் சொல்லப்படுவது சந்நியாச யோகம் என்றும், பக்தியைப் பற்றிச் சொல்லப் படுவது பக்தி யோகம் என்றும், கூறப்படு