பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் 29 கிறதே தவிர, யோகம் என்ற சொல்லுக்குச் சிறப் பான தனியான ஒரு பொருள் காணப் படவில்லை. இப்படிப் பார்க்கும் போது சந்நியாசம், பக்தி, ஞானம் போன்றவைகளே யோகம் என்ற பொதுப் பெயரில் கூறப்படுகின்றன என அறியலாம். கீதையின் முதல் அத்தியாயம் அர்ச்சுனனின் துயர யோகம் எனப்படுகிறது. துயரம் கூட யோகம் என்ற அளவிற்கு யோகம் என்ற சொல் இங்கே பொருளற்றுப் போகிறது. கீதை கையாளும் யோகம் என்ற சொல்லின் பொருளை இப்போது தெரிந்தாயிற்று. இனி நாம் அர்ச்சுனன் துயரம் என்ற முதல் யோகத்தில் - அத்தியாயத்தில் - என்ன சொல்லப் படுகிறது என்று பார்க்கலாம். இந்தப் பகுதியில் 47 சுலோகங்கள் அல்லது செய்யுள்கள் உள்ளன. முதல் 10 சுலோகங்கள் படை அணி வகுப்பை விளக்குகின்றன. 12 முதல் 19 வரை உள்ளவை வீரர்கள் சங்க நாதம் செய்ததை விவரிக்கின்றன. 20வது சுலோகம் அம்புகள் பறந்து போர் தொடங்கி விட்டதை அறிவிக்கிறது. 21 முதல் 27 வது சுலோகம் வரை அர்ச்சுனன் தேரில் இருபடை