பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கீதை காட்டும் பாதை களுக்கும் நடுவில் சென்று பார்வை யிடுவதை விவரிக்கின்றன. 28 முதல் 47 வரை அர்ச்சுனன் தயக்கம் அடைவது பேசப்படுகிறது. ஒரு செய்தியைச் சொல்லும் போது, நாம் என்ன சொல்கிறோமோ, அது கேட்பவனுக்குத் தெளிவாகப் புரியும்படி சொல்ல வேண்டும். இதுவா அதுவா என்று குழம்பும்படி சொல்லக் கூடாது. சாதாரணச் செய்தியைச் சொல்லுவதற்கே இது முறை என்றால், பகவத் கீதையைச் சொல்லுகிற வியாச பகவான் எப்படிச் சொல்ல வேண்டும். இதோ பகவத் கீதையில் பத்தாவது சுலோகம் வியாச பகவான் அருளியது. தொடங்கப் போகும் போர் பற்றிய செய்தி. துரியோதனன் துரோணரிடம் சொன்னதாக இந்த சுலோகம் அமைந்துள்ளது. போர்க்கள நிலவரம் பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் திருதராட்டிர மாமன்னருக்கு சஞ்சயன் என்ற அமைச்சன் இதை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறான். இந்தப் பத்தாவது சுலோகத்தைப் பாரதியார் நமக்கு மொழி பெயர்த்துத் தருகிறார்.