பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் 31 பீஷ்மனால் காக்கப்படும் தமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. பீமனால் காக்கப்படும் அவர் களுடைய படையே நிறைந்திருக்கிறது. -சுலோகம் 10 இதே சுலோகத்தை மூதறிஞர் ராஜாஜி கீழ்க் கண்டவாறு மொழி பெயர்த்திருக்கிறார். தம்முடைய சேனை பீஷ்மரால் பேணிக் காக்கப்பட்டு அளவு கடந்து நிற்பது உண்மையே. ஆனால் பீமன் தலைமை வகிக்கும் அந்தச் சேனையும் போதிய பலம் பெற்றுத்தான் இருக்கிறது. இதே சுலோகம் கீதா பிரஸ் வெளியீட்டில் கீழ்க் கண்டவாறு மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. This army of ours, fully protected by Bhisma. is unconquerable; while that army of theirs, guarded in every way by Bhima, is easy to conquer. இதையே அன்னி பெசன்ட் அம்மையார் இவ்வாறு மொழி பெயர்க்கிறார். Yet insufficient seems this army of ours, though marshalled by Bhishma, while that army of theirs seems sufficient, though marshalled by Bhima. துரியோதனனுடைய படை மிகுதியாகவும் பாண்டவர் படை குறைவாகவும் உள்ளதாக ஒரு சிலரும், துரியோதனன் படை குறைவாகவும் பாண்ட வர் படை மிகுதியாகவும் இருப்பதாக வேறு சிலரும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்,