பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கீதை காட்டும் பாதை சுலோகம் ஒன்றுதான். அதன் செய்தி இரு மாதிரியாகவும் பொருள் படுகிறது. நாம் மட்டும் குழம்பிப் போகவில்லை. இந்த சுலோகத்திலுள்ள சொற்களைக் கேட்ட கண்ணற்ற திருதராட்டிரன் எவ்வளவு குழம்பிப் போயிருப்பான். இந்தக் குழப்பத்திற்கு என்ன காரணம். முக்காலமும் அறிந்தவராகக் கருதப்படும் வியாச முனிவர், இந்தச் செய்யுளில் கையாண்டிருக்கும் ஒரு வட சொல் தான் இப்படி ஏறுக்கு மாறான பொரு ளைத் தருகிறது. அபரியாப்தம்’ என்ற அந்தச் சொல் குறைவா னது என்ற பொருளையும் தரக்கூடியதாம்; அளவற் றது என்றும் பொருள்படுமாம். அன்னி பெசன்ட் அம்மையார் இதை விளக்கிச் சொல்லுகிறார். இது வட மொழியின் குற்றமா, இதைக் கையாண்ட வியாச முனியின் குற்றமா, மொழி பெயர்த்த அறிஞர்களின் குற்றமா? யார் குற்றமானாலும், எது சரியென்று யாரா லும் தீர்மானிக்க முடியாததாக இருக்கிறது. 12 முதல் 16வது சுலோகம் வரை போர் தொடங்குவதற்கு அறிகுறியாக இரு தரப்புத் தளபதி களும் சங்க முழக்கம் செய்கிறார்கள். 20வது சுலோ கத்தில் போர் தொடங்கி விட்டதற்கு அடையாள மாக அம்புகள் பறக்கத் தொடங்கி விட்டன.