பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப்ார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் 33 அந்த நேரத்தில் அர்ச்சுனன் தன் தேரை இரண்டு படைகளுக்கும் நடுவே கொண்டு போய் நிறுத்தச் சொல்லுகிறான். இரு புறத்திலிருந்தும் பறந்துவரும் அம்புகளுக் கிடையே போவதென்பது சற்றும் பொருத்தமாக இல்லை. சுலோக வைப்பு முறையில் இது ஒரு குறைபாடு, சஞ்சயன் என்பவன் துரியோதனனுடைய அமைச்சர்களிலே ஒருவன். திருதராஷ்டிரனுக்குப் போர்க்களச் செய்திகளைச் சொல்லுவதற்காக அமர்த்தப்பட்டவன். அவன் திருதராஷ்டிரனிடம் மதிப்பும் மரியாதையும் உடையவனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால், அவன், திருதராஷ்டிரனிடம் செய்தி களைக் கூறும் போது, தான் பாண்டவர்களின் கை யாள் என்று கருதும்படி பேசுகிறான். துரியோதனாதியரை, அவன் தந்தையிடமே இழிவு படுத்திப் பேசுகிறான். 19வது சுலோகத்தில் பாண்டவர்களின் சங்க நாதம் திருதராஷ்டிரன் கூட்டத்தாரின் நெஞ்சு களைப் பிளந்தது என்று திருதராஷ்டிரனிடமே கூறு கிறான்.