பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கீதை காட்டும் பாதை 20வது சுலோகத்தில் திருதராஷ்டிரன் கும்பலை நோக்கி வில்லை ஏந்திக் கொண்டு அர்ச்சுனன் சென்றான் என்கிறான். இப்படிப்பட்ட வஞ்சகன் கூறும் செய்திகளைத் திருதராஷ்டிரன் கேட்டுக் கொண்டிருந்தான் என்பது விந்தையே! அடுத்துவரும் சுலோகங்கள் தாம் கீதை பிறப்ப தற்குக் காரணமானவை. அவற்றில் அர்ச்சுனன் மனமாற்றம் விளக்கப் படுகிறது. அதுவரை பழியுணர்வோடு, துரியோதனாதி யரை வெறுத்து ஒழித்துவிட வேண்டும் என்ற வெறி யோடு இருந்த பார்த்தன், எதிரே நிற்கும் இரு படை வீரர்களையும் பார்த்தவுடன், அவன் நெஞ்சுக்குள்ளே உள்ள மனித நேயம் வெளிப்படப் பேசுகிறான். உறவினர்கள் வெறும் பூமிக்காக ஒருவரை யொருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்ள வேண்டுமா என்று நல்லெண்ணம் கொள்ளுகிறான். அந்த நேரத்திலே, அர்ச்சுனன் உண்மையான மாந்த நேயம் உள்ளவனாகப் பரிமளிக்கிறான். இரண்டு வரிசையிலும் நிற்பவர்கள் ஒருவருக் கொருவர் உறவினர்கள். தந்தை முறை யுள்ளவர்கள், பாட்டன் முறை யுள்ளவர்கள், ஆசிரியர்கள்!