பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் 35 இப்படிப்பட்ட மக்கள் ஒருவரை யொருவர் வெட்டிக் கொன்று புவியை இரத்தக் களரியாக்க வேண்டுமா என்று அவனுடைய நன்மனம் சிந்திக் கிறது. கண்ணா, போர் செய்ய வேண்டி இங்கு திரண்டு நிற்கும் என் சுற்றத்தார்களைக் கண்டு, என் அவயவங்கள் சோர்கின் றன. என் வாய் உலர்கிறது. என் உடம்பு நடுங்குகிறது. உயிர் சிலிர்க்கிறது! காண்டீபம் (வில்) கையிலிருந்து நழுவு கிறது. உடம்பில் எரிச்சல் உண்டாகிறது. கைகால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. -சுலோகம் 28, 29, 30. குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதவரும், மாமன்னரும், பேரரும், மைத்துனரும், சம்பந்தி களும் இங்குள்ளனர். நான் கொல்லப் பட்டாலும் இவர் களைக் கொல்ல விரும்பவில்லை. - சுலோகம் 34, 35. அந்தச் சிந்தனைகளை வியாச முனிவர் தம் கவிகளில் அழகாகவே எடுத்துக் காட்டுகிறார். அடுத்து அர்ச்சுனன் தொடர்ந்து பேசும்பேபது, மிக உயர்ந்த பண்பு வெளிப்படப் பேசுகிறான். திருதராஷ்டிரன் பிள்ளைகள் மிக மோசமானவர் களாக இருந்தாலும் பாதகர்களாக இருந்தாலும் - உறவினர்கள் - உறவினர்களை யெல்லாம் கொன்று விட்டு நாங்கள் சுகபோகமாக வாழ்வதில் என்ன பயன் இருக்கிறது என்று கூறுகிறான். அடுத்து போரின் விளைவுகளை மிக நன்றாக உணர்ந்து தெளிவோடு பேசுகிறான்.