பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கீதை காட்டும் பாதை உலக மகா கொடியவனான செங்கிஸ்கான் படையே யானாலும் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்த முகமது லோடி கஜினி முகமது போன்ற வெறிப் படையே யானாலும், அன்னிய நாட்டின் மீது படை யெடுத்துச் செல்லும் எந்தப் படையும் போர்ப் படை என்ற பெயரிலே மற்றொரு நாட்டுக்குள்ளே போன வுடனே அவர்கள் செய்வது கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுமை களே என்பதை வரலாறு ஒவ்வொரு முறையும் நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. மிகப் பழங்காலத்திலும் இந்தக் கொடுமை வழக் கத்தில் இருந்திருக்கிறது என்பதை அர்ச்சுனன் வாக்கிலிருந்து அறிகிறோம். போரினால் குல நாசம் ஏற்படும் என்றும், குல நாசத்தால் குல தர்மங்கள் அழியும் என்றும், தர்மம் அழிவதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார் கள் என்றும், குலமாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பம் உண்டாகிறதென்றும் அர்ச்சுனன் 39,40, 41 சுலோகங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான். போர் வீரர்கள் பகைவனின் ஊருக்குள் புகுந்து பெண்களைக் கற்பழிக்கப் போகும் போது சாதி வேற்றுமை பார்த்துக் கற்பழிப்பதில்லை. அகப்பட்ட பெண்களை, அகப்பட்ட நேரத்தில் அலங்கோலமாக்கிக் கதறக் கதற கற்பழித்து விட்டுப் போய்விடுவார்கள்,