பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் 37 அந்தக் கற்பழிப்பிலே கர்ப்பம் அடையும் பெண் களுக்குப் பிறந்த பிள்ளைகள், எந்த வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட முடியாது, மக்களால் வெறுத்து ஒதுக்கப் படுவார்கள். இதனைத்தான் அர்ச்சுனன் வருணக் குழப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான். இங்கே நாம் அறிய வேண்டியது அர்ச்சுனனே வருணக் குழப்பத்தில் பிறந்தவன் தான். அர்ச்சுனன் பாரம்பரியத்தை அறிந்தால் அவன் எந்த வருணத் தைச் சேர்ந்தவன் என்று கூற முடியாது. ஆனால், அர்ச்சுனன் பிறப்பு அதிகார வர்க்கத் தில் ஏற்பட்ட - தெரிந்தே செய்யப்பட்ட வினையி னால் தோன்றியது. ஆனால் போர்க் களத்தில் நிகழும் கற்பழிப்புகள், மேலாதிக்கச் சமூகத்தை மட்டுமின்றிப் பொது மக்களையும் பாதிக்கும் கேடாகும். இதை நன்றாக உணர்ந்து தெளிவாகப் பேசு கிறான் பார்த்தனாகிய அர்ச்சுனன். மேலும் பாவம் நரகம் பற்றியெல்லாம் எடுத்துக் கூறிப் போர் செய்ய மறுத்துக் காண்டீபத்தைக் கீழே போட்டுவிட்டுத் தேர்த் தட்டிலே உட்கார்ந்து விடுகிறான். கலிங்கப் போர் முடிந்தபிறகு போரின் விளைவு களைக் கண்டு அசோகர் மனம் திருந்தினார்.