பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தொழிலைச் செய் பலனை எதிர்பார்க்காதே! அர்ச்சுனன் மூட நம்பிக்கை உள்ளவனாகக் காணப்படுகிறான். நரகம், சுவர்க்கம் இவற்றில் நம்பிக்கை வைத்திருக்கிறான். பாவிகள் என்று தெரிந்து, அவர்களைக் கொன் றாலும் கூடப் பாவம் ஏற்படும் என்றும், கொலைப் பாவம் செய்தவன் நரகம் அடைவான் என்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறான். ஒரு குலத்தை அழித்தவர்களுக்கு நரகம் நிச்சயம் என்று அவன் நம்புகிறான். போரினால், குலநாசம் ஏற்படுவதோடு, குறிப் பிட்ட வருணத்தில் சேர்க்கப்பட முடியாத சந்ததி தோன்றுவதால் அவர்கள் பிதிர்க்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். தம்முடைய குலம் தெரியாதவர்கள் எந்தப் பிதிர்க்களுக்குப் பிண்டம் கொடுப்பார்கள்?