பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 41 சந்ததியினர் பிண்டமும் நீரும் கொடுத்தால் தான், பிதிர்க்கள் நலமாக இருப்பார்கள் என்ற பரம் பரை மூட நம்பிக்கை அர்ச்சுனனைப் பற்றி யுள்ளது. போரினால் ஏற்படும் கேடுகளில் இதை முக்கிய மாகப் பேசுகிறான் அர்ச்சுனன், இந்தப் பாவத் திற்குத் தான் ஆளாகக் கூடாதென்பதைத் தெளிவா கவே கூறுகிறான். எல்லாவற்றிற்கும் மேலாக - தன் தாத்தாவான பீஷ்மரையும் - தன் ஆசாரியரான துரோணரையும் - எதிர்த்துப் போரிடவும் - கொல்லவும் அர்ச்சுனன் பெரிதும் கூசுகிறான் - தயங்குகிறான். எல்லாப் பிள்ளைகளையும் போல் தன்னையும், எடுத்து வளர்த்தவர் பீஷ்மர். சத்தியத்தின் உருவ ᏞᏝᎥᎢ &5 £☽_6jᎢ6ᎥᎢ 6blIᎱ . துரோணரோ தனக்கு வில்வித்தை கற்பித்த குரு. எத்தனையோ பேருக்குக் குருவாய் இருந்த போதிலும் தன்னிடம் தனி அன்பு செலுத்தி வந்தவர். தன்னுடைய போர்த் திறமையே அவர் இட்ட பிச்சை. அப்படிப்பட்ட இரண்டு பேரும் எதிர் அணியில் நிற்கிறார்கள். அவர்களால் தான் கொல்லப் பட் டால் அது பெருமை என்றும், தன்னால் அவர்கள் கொல்லப்படுவது பெரும் பாவம் என்றும் அர்ச்சுனன் நினைக்கிறான். -ே3