பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ைேத காட்டும் பாதை பாவ புண்ணியங்களில் நம்பிக்கையும் மோட்ச நரகங்கன் பற்றிய கருத்தும் பிடித்துக் கொண்டி ருக்கும் - மூட நம்பிக்கையுள்ள அர்ச்சுனனைக் குழப் புவது கிருஷ்ணனுக்கு எளிதாக இருக்கிறது. கொல்லுவது புாவம் என்று கூறும் அர்ச்சுனனை -கொல்லாமல் இருப்பது பாவம் என்று கூறிப் புதுப் பாவம் ஒன்றை உருவாக்குகிறான் கிருஷ்ணன். இதற்கு வேதாந்தம் - ஆத்ம வாதம் பேசுகிறான். மனிதன் அழிந்தாலும், மனிதனுடைய ஆத்மா அழிவதில்லை என்றும், ஆத்மாவுக்கு அழிவில்லாத தால், யாரும் உண்மையாகக் கொல்லப்படுவதில்லை என்றும் வேதாந்தம் பேசுகிறான் கிருஷ்ணன். போரிலே ஒருவனைக் கொன்றால் அவன் உடல் தான் வீழ்கிறதே தவிர அவன் ஆத்மா அழிவ தில்லை என்று ஆத்ம வாதம் பேசுகிறான். ஆகை யினால் போர் செய்; எழுந்திரு என்று தட்டி எழுப்பு கிறான். ஆத்மா நிலைத்தவன்; அழிவற்றவன், அளவிட இயலாத வன்; எனினும் அவனுடைய வடிவங்கள் மட்டுமே முடிவுடை யன; ஆகையால் பாரதா போர் செய்! -பகவக் கீதை சாங்கிய யோகம் 2 : 18 ஆத்மா பிறப்பதுமில்லை: இறப்பதுமில்லை. இது பிறவா தது; இறவாதது; தேயாதது; வளராதது; உடல் கொல்லப் படும்போது ஆத்மா கொல்லப் படுவதில்லை. 2 : 20