பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 43 பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வது போல், ஆத்மா பழைய உடல்களை விட்டு விட்டு புதிய உடல்களை அடைகிறது. –2 : 22 பாரதா எல்லார் உடம்பிலும் உள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன் ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டாம். 驱 –2 : 30 மனிதனுக்கு ஆத்மா என்ற ஒன்று இருப்பதாக வும் - அது அழிவில்லாதது என்றும் - ஆகவே கொல் வது பாவம் இல்லை என்றும் கிருஷ்ணன் கூறுகி றான். கொல்லுவதை நியாயப் படுத்துவதற்காக இந்த வேதாந்தக் கருத்தைக் கூறுகிறான். வேதாந்தம் என்ற சொல்லுக்கும் வேதம் என்ற சொல்லுக்கும் பொருள் தொடர்பு கிடையாது; மேல் போக்காகப் பார்த்தால் வேதத்தின் சாரம் வேதாந் தம் என்று தோன்றும். ஆனால் வேத நூலில் - குறிப்பாக ரிக் வேதத் தில் இந்த நிலையாமைக் கருத்துக் காணப்பட வில்லை. ஆத்ம வாதமே ரிக் வேதத்தில் இல்லை; இந்த ஆத்மவாதம் வேதத்திற்குப் பிற்பட்ட நூல்களில் தான் காணப்படுகிறது. கிருஷ்ணன் பேசும் இந்தக் கீதைக் கருத்துக்கள் முழுக்கவே வேதாந்தம் ஆகின்றன. வேதாந்தத்