பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

''

முன்னுரை

கற்பது பற்றி திருவள்ளுவர் அருமையான கருத்தைக் கூறுகிறார்.

கற்க கசடற
கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இது திருக்குறள்.

ஒரு நூலைக் கற்கப் புகும் ஒருவன் அதை நன்றாகக் கற்கவேண்டும். கசடு - மனமாசு நீங்கும் அளவு கற்க வேன்டும்.

      கற்க கசடற

என்பதன் கருத்து இதுதான்.

சில நூல்களைக் கற்கும் போது கசடு ஏற்படும். அதற்கென்றே நூல் படைக்கும் ஆசிரியர்கள் இருத்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள்.

எனவே தான் திருவள்ளுவர் கசடு ஏற்படும்படி கற்கக் கூடாதென்றும், கசடு அறும்படி கற்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறினார்.

கசடு ஏற்படும் படியான நூல்களை ஒதுக்கி, கசடு அறும் படியான நூல்களைக் கற்கவேண்டும் என்பதற்காக

கற்பவை கற்க என்று தொடர்ந்து கூறினார்.

கற்கத் தக்க நூல்களைக் கற்கவேண்டும் என்றார்.

மனமாசு அகற்றும் சிறந்த நூல்களைக் கற்றபின், நிற்க அதற்குத் தக என்று முடிவாகக் கூறினார்.