பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கீதை காட்டும் பாதை தைச் சாதாரண மக்கள் குறிப்பிடும் போது வெட்டி வேதாந்தம் என்று குறிப்பிடுவார்கள். இந்த வெட்டி வேதாந்தம் பேசியே கிருஷ்ணன் அர்ச்சுனனைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறான். ஆத்மா என்பது என்ன? இதிலும் வேதாந்தம் பேசுபவர்களுக்கிடையே சரியான கருத்தில்லை. ஆத்மா என்று குறிப்பிடும் போது சாதாரணமாக உயிர் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. உயிர் என்பது நிலையானதா? வேதாந்திகள் அது நிலையானது என்று கூறுகிறார்கள். அது ஓர் உடலை விட்டு மற்றோர் உடலுக்குள் புகுந்து கொள் கிறது என்கிறார்கள். உடல்கள் அதற்குச் சட்டை போன்றது என்கிறார்கள். ஓர் உயிர் ஓர் உடலை விட்டு மற்றோர் உடலில் புகுந்து கொள்ளும் தன்மை யுள்ளது என்றால், அது நினைத்த போது ஒன்றை விட்டு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளலாமே! அப்படிப் புகுந்து கொள்ளும் ஆற்றலை வைத் துத் தான் கூடுவிட்டுக் கூடு பாயும் நிலையைக் கற்பனை செய்தார்கள். - திருமூலர் என்பவர், தன் உடலை விட்டு, இறந்து போன மூலன் என்ற மாடு மேய்ப்பவன் உடலில் புகுந்து கொண்டதாகக் கூறும் கதைக்கு இந்த வேதாந்தக் கருத்துத்தான் அடி மூலம் ஆகும்.