பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிரிபார்க்காதே! 45 வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறுபாடான சித்தாந்தக் கருத்துக்களை வகுத்துக் கொடுத்தவர் திருமூலர். பொதுவான கருத்து, மனிதன் இறந்து போகும் போது, பிரியும் உயிர் புதிதாகப் பிறக்கும் ஒரு குழந் தையின் உடலில் புகுந்து கொள்வதாகவே கூறப்படு கிறது. இந்த அடிப்படையில் நாம் பார்த்தால், உலகில் உள்ள உயிர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையே இருப்பதாகவும், அவை மாறி மாறி ஒன்று இறக்க மற்றொன்றில் புகுந்து நிலை கொள்வதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நரகம் சொர்க்கம் ஆகியவற்றில் புகுந்து விட்ட உயிர்கள் மீண்டும் பிறக்காவிட்டால், உலகில் உயிர்களின் தொகை குறைந்து வர வேண்டும். நடைமுறையில் பார்த்தால், உலகத்தில் இறப்பு வீதத்தை விடப் பிறப்பு வீதம் அதிகப்பட்டுக் கொண்டு வருவதை அறியலாம். மனிதன் முதல் ஈ எறும்பு வரை ஈ எறும்பு முதல் பாக்டீரியாக்கள் வரை உற்று நோக்கினோமேயா னால், பிறப்புத் தொகை பெருகி வருவதோடு நிற்கவில்லை. பெருகிப் பெருகி விரைவு விரைவாக வளருவதைக் காணலாம்.