பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கீதை காட்டும் பாதை இந்தக் கருத்தில் கானும் போது இறந்த உடலில் இருந்து பிரிந்த ஆத்மா இன்னோர் உயிருக் குள் புகுந்து கொள்கிறது என்றால், ஒன்று பத்தாகப் பெருகும் போதும், பத்து நூறாகப் பெருகும் போதும், பிறக்கும் உயிர்களுக்குள் வந்து புகுந்த ஆத்மாக்கள் எங்கிருந்து வந்தன என்று சொல்ல முடியுமா? - ஐம்பது ஆண்டுகளுக்கு முன் முப்பது கோடியாக இருந்த பாரத நாட்டின் மக்கள் தொகை இன்று நூறு கோடியாகி யிருக்கிறது. ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் சராசரியாக தன் ஆயுளுக்குள் ஆறு புதிய ஆத்மாக்களை உருவாக்கி விட்டுத் தான் சாகிறாள். ஒவ்வொரு பசுவும் தான் வாழும் வரை ஆண் டுக்கு ஒன்று அல்லது இரண்டு கன்றுகளைத் தந்து விட்டுப் போகிறது. ஒவ்வொரு நாயும் ஒவ்வொரு ஆண்டும் ஆறு குட்டிகளைப் புது வரவாக்கி விடுகிறது. ஒவ்வொரு எறும்பும் தான் சாவதற்குள் நூறு நூறு எறும்புகளைப் படைத்து விடுகிறது. ஒவ்வொரு பாக்டீரியாவும், இலட்ச லட்சம் பாக் டீரியாக்களைச் சில மணி நேரங்களுக்குள் பெருக்கி விடுகிறது. ஒவ்வொரு மரம், செடி, கொடிகளும் நூற்றுக் கணக்கான விதைகளை உற்பத்தி செய்கின்றன.