பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 47 இதை யெல்லாம் பார்க்கும் போது, ஆத்மா நிலயானது என்பதோ அது புது உடலில் புகுந்து கொள்கிறது என்பதோ அர்த்தமற்ற கருத்தாகவே யிருக்கிறது. - உயிர்கள் பன்முகப் பெருக்கம் உடையனவாக விளங்குகின்றன என்பதை அறிகிறோம். உடலுக்கும் உயிருக்கும் தொடர்பு இல்லை என்ற கீதைக் கருத்து; உயிரை அழிக்க முடியாது என்ற கருத்து சரியானதல்ல என்பது புரியும். உடல் அழியும் போதே உயிரும் அழிந்து விடுகிறது என்பது தான் உண்மை. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது திருமூலர் திருமந்திரம். உயிர் அல்லது ஆத்மா என்பது தனியான ஒரு பொருள் அல்ல. அதற்கென்று தனித்தன்மை எது வும் கிடையாது. உடலின் தன்மைதான் உயிருக்கும் உரியது. உடல் செயலற்றுப் போகும் போது உயிரும் செயலற்று விடுகிறது. உயிர் என்பது உடலில் ஒடும் மூச்சுத்தான்! மூச்சு என்பது காற்றுத்தான். காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா என்ற இந்தக் கருத்து இங்கு எண்ணத் தக்கது. காற்று உடலை விட்டுப் பிரியும் போது - காற்றோடு