பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கீதை காட்டும் பாதை காற்றாகக் கலக்கும் போதுதான் காயம் பொய்யா கிறது. அதுவரை - உயிருள்ளவரை - அது மெய் யாகத் தான் இருக்கிறது. சுறந்த பால் முலைப் புகா: கடைந்த வெண்ணெய் மோர்புகா; உடைந்துபோன சங்கின் ஒசை உயிர்களும் உடற்புகா: விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டுபோய் மரம்புகா; இறந்தவர் பிறப்பதில்லை; இல்லை யில்லை இல்லையே! சித்தரின் இந்தப் பாட்டு, உயிர் மீண்டும் எதிலும் புகுவதில்லை என்பதைத் தெளிவாகவே விளக்கு கிறது. பெருகிப் பெருகி விளைவது தான் உயிரின் இயற்கை. அதாவது உயிரோடு கூடிய உடலின் இயற்கை. உடல் பழுதுபடும்போது, நோயினாலோ, பகை வன் செயலினாலோ பழுதுபடும் போது உயிர் பிரிகிறது. பிரிகிற உயிர் வேறோர் உடலில் புகும் என்ப தும், நரகம் மோட்சம் செல்லும் என்பதும், அது அழியாதது என்பதும் வெட்டி வேதாந்தம்ே யாகும். இந்த வெட்டி வேதாந்தத்தின் அடிப்படையில் உயிர் அழியாதது; ஆகையால் உடலை வெட்டிக் கொல் என்று கிருஷ்ணன் கூறுவது ஏற்கனவே மூடநம்பிக்கை யுள்ளவனான அர்ச்சுனனை மேலும்