பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 49 மூட நம்பிக்கை யுள்ளவனாக மூளைச் சலவை (Brain Wash) செய்யும் செயலாகும். கொல்லுவது பாவம் அதனால் நரகம் வாய்க்கும் என்று அர்ச்சுனன் .சொன்னான். கிருஷ்ணனோ, போரை நடத்தா விட்டால் பாவம் சேரும் என்றும், போர் செய்தால் அதிலே கொல்லப்பட்டால் மோட்சம் கிடைக்கும் என்றும் பாவ புண்ணியத்தின் இலக் கணத்தையே மாற்றுகிறான். நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால் அதனால், சுவ தர்மத்தையும், கீர்த்தியையும் கொன்ற பாவத்தை அடைவாய். –2 : 33 அர்ச்சுனன், தன்னைப் பகைவர்கள் கொன்று போட்டாலும் சரி, நான் உறவினர்களை - குருவை -தாத்தாவைக் கொல்ல மாட்டேன் என்று தெளிவா கவே சொல்லுகிறான். நீ போர் செய்யாவிட்டால், அச்சத்தால் விலகி யதாகக் கருதுவார்கள். இதனால் நீ சிறுமை யடை வாய் என்று மனம் பேதலிக்கச் செய்கிறான் கண்ணன். நீ கொல்லப் பட்டால் வானுலகடைவாய்; வெற்றி பெற்றால்; புவியை ஆள்வாய் - அதனால் போர் செய்ய எழுந்து நில் (2:37) என்று மோட்ச வழி காட்டுகிறான். அர்ச்சுனன் எதனால் தனக்குப் பாவம் உண்டா கும்; நரகம் கிடைக்கும் என்று சொன்னானோ, அதே