பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கீதை காட்டும் பாதை செயலால், மோட்சம் உண்டாகும் என்று கிருஷ்ணன் கூறுகிறான். - தொடர்ந்து கிருஷ்ணன் பேசும் போது கீதை யின் முக்கிய கருத்தாகப் பலரும் கூறும் கருத்தைக் கூறுகிறான். தொழில் செய்யத் தான் உனக்கு அதிகாரம் உண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கு அதிகாரம் இல்லை. பயனைக் கருதாதே. தொழில் செய்யாமல் இராதே. –2 : 47 கடமையைச் செய். பயனை எதிர் பார்க்காதே என்பதுதான் இதன் பொருள். இதைத் தான் மிகச் சிறந்த கருத்தாகப் பிரசாரம் செய்கிறார்கள். மேற் போக்காகப் பார்க்கும் போது இது ஏதோ ஞான உபதேசம் போலத் தோன்றும். ஆழ்ந்து நோக்கினால் ஞானத்தைப் பேதலிக்கச் செய்யும் தன்மையை உணரலாம். மக்களிடையே அடிமை மனப்பான்மை வளரவே. இக்கருத்துப் பயன்படுகிறது. அடுத்த சுலோகத்தில், தனஞ்சயா, யோகத்தில் நின்று பற்றை நீக்கி வெற்றி தோல்விகளை நிகர் எனக் கொண்டு தொழில்களைக் செய்க. இந்த நடுநிலையே யோகம் எனப்படும். -கீதை 2 : 48 கீதை சொல்லும் யோகம் எப்படிப் பட்டது என்று இந்த சுலோகத்தில் புரிந்து விடுகிறது. பொதுவாக நாம் ஒரு தொழில் அல்லது செய லைச் செய்யும் போது ஒரு பயன் கருதியே செய்கிறோம்.