பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 51 எந்தச் செயலுக்கும் ஒரு பயன் உண்டு. அந்தப் பயன் என்பது தனிப்பட்ட முறையில் தனக்கு நன்மை பயப்பதாக இருக்கலாம். அல்லது பொது நன்மை கருதியதாக இருக்கலாம். அல்லது தன் வருங்கால பரம்பரைக்கு நன்மை பயப்பதாக இருக்கலாம். ஒரு செயலால் நன்மையும் விளையலாம், தீமை யும் விளையலாம். நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டது நல்ல செயல் என்றும், தீமை விளைப்பது தீய செயல் என்றும் கருதப்படுகிறது. தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு என்பது திருக்குறள். பயனைக் கருதாமல் செய்ய வேண்டும் என்ற கருத்து எந்த வகையிலும் பயனில்லாத கருத்தாகும். ஒரு போர் வீரனிடம் நீ பயன்பற்றிக் கருதாதே; உன் கடமையைச் செய் என்றால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கலாம். போரினால் விளையும் பயன் அவனைச் சேர்ந்த தல்ல; அது அவனுடைய அரசனைச் சேர்ந்ததாகும். அப்போதும் அரசனுடைய அல்லது தன் தாய் நாட்டி னுடைய வெற்றி என்பது மறைமுகமான பயனாக இருக்கிறது. மேலும் அவன் செயலால் அவனுக்கு நேரடிப் பயன் இல்லை என்றாலும், அவன் பெறும் ஊதியம்