பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கீதை காட்டும் பாதை அவன் பெறும் பயனாகிறது. அந்தப் பயனும் இல் லாமல் அவன் போர் செய்வதில் பொருளே இல்லை. சாதாரணப் போர்வீரனின் வெற்றி தோல்வி அவனுடைய அரசனுக்குப் பயன் தருவதாக இருக்க லாம். அவனை உன் சொந்தப் பயனைக் கருதாதே; உன் கடமையைச் செய் என்று சொல்லி விடலாம். ஆனால், அர்ச்சுனன் ஒரு மன்னன். அவன் தன் நாட்டு வெற்றிக்காக - தான் அரசு பெறுதவற் காக - பாண்டவர்கள் மீண்டும் ஆளும் உரிமை பெறு வதற்காக - ஒரு பெரிய பயன் கருதிய போராட்டத் தில் தான் ஈடுபட்டிருக்கிறான். போரின் வெற்றி அவர்களுடைய பதின்மூன் றாண்டுக்குக் கனவுகளை - இலட்சியத்தை - குறிக் கோளை அடையும் பயன் உள்ளதாகும். - அவனைப் பார்த்து நீ பயனை எதிர்பாராதே. உன் தொழிலைப் - போர்த் தொழிலைச் செய் என்று சொல்வது பொருத்தமா யில்லை. வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படா மல் போர் செய்வது என்பது - உற்சாகமற்ற - ஈடு பாடற்ற - வெறும் பொம்மை விளையாட்டாகத்தான் இருக்க முடியும். ஒரு வீரனுக்கு வெற்றி என்பது இலட்சியமாக இருக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டால் தாங்கிக் கொள்ள உறுதி வேண்டும். அல்லது வீரமரணம் அடைதல் வேண்டும்.