பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! S3 ஆனால் இலட்சியம் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும். வெற்றி தோல்விகள் நிகர் எனக் கொள் வது என்பது வீரத்தின் இலக்கணத்துக்கே ஒவ்வாத தாகும். எனவே கடமையைச் செய்; பலனைப் பற்றி நினைக்காதே என்பது எவ்வகையிலும் நல்ல கருத் தல்ல. கீதையின் இந்தக் கருத்து சூழ்ச்சிக்காரர்களுக் குத் தான் உதவியாக இருக்கும். ஒரு தொழில் செய் பவனை - ஏமாற்றி வேலை வாங்க இந்தக் கருத் தைப் பயன் படுத்தலாம். அவனவன் தன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும்; பலனை எதிர்பார்க்கக் கூடாது என்று புது முயற்சிகளில் ஈடுபடாமல் தடுப்பதற்கே இது பயன்பட்டு வருகிறது. எதுவும் செய்யாமலே பலனை எதிர் பார்க்கும் ஏமாற்றுக் காரர்கள், செயல் செய்பவர்களைப் பார்த்துப் பலனை எதிர் பார்க்காதே; உன் தொழி லைச் செய் என்று கூறுவது தான் கீதை காட்டும் வழியாக இருக்க முடியும். நேர்மை எண்ணம் கொண்டவர்கள் இதை ஏற்றுக் கொள்ள இயலாது. கீதையைப் பற்றிப் பேசும் பலர் அதைத் திருக் குறளோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.