பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தான் கற்றதற்கு அடையாளமாக அந்தச் சிறந்த நூல் காட்டும் வழியில் நடக்க வேண்டும் என்று கூறினார்.

ஒரு சிலர் இது நல்ல நூல்; நீதி நூல்; ஞான நூல் என்று சிலவற்றை அறிமுகப் படுத்துவார்கள். நாம் கற்கத் தொடங்கும் போதுதான், அவை கசடு நிறைந்தவை என்பது புலப்படும்.

அப்போது அந்தக் கசடு எது என்று தெரிந்து அது அறும்படி கண்டு தெளிந்து விலகி நிற்க வேண்டும். அப்படிப்பட்ட நூல்களைக் கற்கும் போது

குணம் நாடிக் குற்றமும் நாடி மிகை நாடி மிக்க கொளல்

என்ற அறிவுரையின்படி நல்லன கொண்டு அல்லன தள்ளி நல்லவற்றின் வழி மட்டும் நிற்க வேண்டும்.

நிற்க அதற்குத் தக என்ற சொற்றொடர் நல்லதற்குத் தக்கவாறு ஒழுகி நிற்க வேண்டும் அல்லதற்குத் தக்கவாறு விலகி நிற்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது.

மேலும், அந்நூலைக் கற்கச் சொன்னவர்கள். அதை ஆக்கியவர்கள், அதைப் போற்றுபவர்கள் மிகப் பெரியவர்களாகவும், உயர்நிலையில் உள்ளவர்களாகவும், இருந்தாலும் அப்படியப்படியே அதை ஏற்றுக் கொன்னாமல், அறிவு அனுபவம், நெறிமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து அதன் பிறகு தான் அதைப் போற்ற வேண்டும் என்றார்.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு