பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கீதை காட்டும் பாதை கீதை பலனைப் பற்றிக் கவலைப் படாமல் செயல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. திருக்குறளோ, பலன் ஏற்படும் வகையில் ஆராய்ந்து செயல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அழிவது உம் ஆவது உம் ஆகி வழி பயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின் என்று பலனை எதிர்பார்த்து, அப்பலனைத் தவறாது எய்தும் வழியைத் தான் கூறுகிறது திருக்குறள். கீதையைப் போல் வெட்டி வேதாந்தம் பேச வில்லை. ஒளவையார் கூட நல்லது செய்வது பற்றி ஒரு கருத்துக் கூறுகிறார். ஒருவருக்கு நன்மை செய்வ தால், செய்யப்படுபவருக்குத்தான் பலன் உண்டு. செய்பவர் பிறர் நலம் கருதுபவராக இருக்க வேண்டும். தன்னலம் கருதிச் செய்யக் கூடாது. அப்படித் தன்னலம் கருதாமல் செய்யும் நற் செயலுக் கும் பயன் உண்டு; அது தாமதமாகக் கிடைக்கும் என்கிறார். ஒருவருக்கு நல்லது செய்யும் போது அதன் பலனை எதிர்பார்த்துச் செய்யாதீர்கள். நீங்கள் எதிர்