பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 53 பாாாமலே அது கிடைக்கும். தென்னைக்கு நீர் வார்த்துக் கொண்டு வந்தால், அது ஒரு நாள் தன் அடியிலே கொட்டிய நீரைத் தலையிலே சுமந்து தரும் என்கிறார். நன்றி ஒருவற்குச் - செய்தக் கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான் தருதலான். இந்தக் கருத்து பலனின்றி எந்த நல்ல செயலும் வீண் போகாது என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. பிறருக்கு உதவி செய்பவர் பலனை எதிர் பார்க்கக் கூடாது என்பதுதான் ஒளவையார் கருத்து. தொழில் செய்பவர் பலனை எதிர் பார்க்கக் கூடாது என்பதல்ல. அர்ச்சுனன் போரினால் அழிவு வருமே என்று கவலைப் படுகிறான். நாடு சீர் குலையுமே என்று வருந்துகிறான். வருணாசிரமம் பாதிக்கப் படுமே என்று கலங்குகிறான். சுற்றத்தார் ஒருவருக் கொரு வர் வெட்டி மாய்த்துக் கொண்டு ஒன்றும் இல்லாமற் போவார்களே என்று தடுமாறுகிறான். தன்னைப் போற்றி வளர்த்த பீஷ்மரையும், போர்க் கலை பயிற் றுவிற்த குருநாதரையும் கொல்ல வேண்டுமே என்று தயங்குகிறான். இந்த நல்லுணர்வுகளை யெல்லாம் மாற்றுவதற்கு ,