பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 கீதை காட்டும் பாதை நீ உன் தொழிலை (போரைச்செய்; அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை நினைத்துப் பார்க்கா தே என்று வெறியேற்றுகிறான் கண்ணன். இந்த வெறியேற்றும் செயல்தான் கண்ணன் காட்டிய வழியாகப் பாராட்டப் படுகிறது. ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவ தென்பது கீதையிலே அடிக்கடி காணப்படுகிறது. தான் சொல்லுவது மாற்றான் மனத்திலே ஏறி விட்டதா என்று எளிதில் அறிந்து கொள்ள முடியாத வன்தான் சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்வான். அப்பொழுதும் ஆவனுக்கு ஐயமே! முதலில் தான் சொல்லும் கருத்து புரியக் கூடிய வகையில் அமைந்திருக்கிறதா என்ற குழப்பம் சொல் பவனுக்கு இருந்து கொண்டே யிருக்கிறது. அத னால், அவன் கேட்பவன் ஈர்த்துக் கொள்ளுகின் றானா என்ற ஐயத்தின் அடிப்படையில் திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லுகிறான். கீழே வரும் சுலோகங்கள் கூறியதையே திரும் பத் திரும்பக் கூறுவதைக் காணலாம். "பார்த்தா ஒருவன் தன் மனத்தில் எழும் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து, தன்னிலேதான் மகிழ்ச்சி பெறுவா னாயின், அப்போது நிலையான அறிவுடையவனென்று சொல்லப் பெறுகிறான்:. - -கீதை 2 55