பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலனை எதிர்பார்க்காதே! 57 துன்பங்களினால் பாதிக்கப் படாமல், இன்பத்திலே நாட் டம் இல்லாமல், பற்று அச்சம் சினம் ஆகியவற்றை விட்டு உறுதியான மனம் படைத்தவன் முனி ஆகிறான். -கீதை 2 : 56 எவன் எதிலும் பற்றில்லாதவனாப், நல்லது வரும்போது மகிழாமலும், கெட்டது வரும் போது வருந்தாமலும் இருக் கிறானோ அவன் அறிவு உறுதி பெறுகிறது. -கீதை 2 : 57 இந்த மூன்று சுலோகங்களும் திரும்பத் திரும்ப ஒரே கருத்தைத் தான் கூறுகின்றன. நிலையான அறிவுக்கு அடையாளம் நல்லதை யும் கெட்டதையும் ஒன்றுபோலப் பாவிக்க வேண்டும் என்பதே இந்தக் கீதையின் பொருள். நல்லது கெட்டது, இன்பம், துன்பம், ஆசை வெறுப்பு இவை யில்லாதவன் அறிஞன் என்று கூறு கின்றன. இந்த சுலோகங்கள். கெட்டதைத் தள்ளி நல்லதை ஏற்பவன் தான் அறிஞனாக இருக்க முடியும். துன்பத்தை அகற்றி இன்பத்தை உண்டாக்குபவன்தான் நல்லவனாக இருக்க முடியும். வெறுப்புக் குரியதை விலக்கி, விரும்பக் கூடியதைச் செய்பவன் தான் சிறப்புடைய வனாய் இருக்க முடியும். இரண்டையும் சமமாக நோக்குபவனால் எந்த நன்மையையும் செய்ய முடியாது. துன்பம் வரும்போது துடிப்பது எல்லோருக்கும் இயல்பு. அந்தத் துடிப்பின் காரணமாக அவன் துவண்டு போய் விடக்கூடாது. தாங்கிக் கொள்ளும் கீ-4 -