பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கீதை காட்டும் பாதை தன்மை வேண்டும். இன்பம் வரும்போது மகிழ்வது மாந்தர் இயல்பு. ஆனால் அந்த இன்பத்தின் காரணமாக ஆட்டம் போடக் கூடாது; அது மீண்டும் துன்பத்தை யே உண்டாக்கும்; இதே கருத்தைத் திருக்குறளில் நாம் காண்கிறோம். ஒட்டு மொத்தமாக இன்பத்தைத் துறந்துவிடு என்று வள்ளுவர் சொல்லவில்லை. தவறாக வரும் இன்பத்தை - அது எவ்வளவு நலம் தருமாயினும் விலக்க வேண்டும் என்று கூறுகிறார். நன்றே தரினும் நடுவிகத்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். இன்பமும் துன்பமும் பெரிதாகிய, அந்த நிலை களில் நிலை தடுமாறாமல் இருப்பது தான் சான் றோர்க்குச் சிறப்பு என்று வள்ளுவர் கூறுகிறார். கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. நடுவு நிலை என்பதை விளக்க வள்ளுவர் கூறும் தெளிவுரை இது. திருக்குறளில் ஒவ்வொரு கருத்தும் மயக்கம் இல்லாத தெளிவுரையாக இருக்கிறது. கீதை கூறும் கருத்தோ தெளிவற்றதாகவும், மயக்கந் தருவதாக வும், குழப்பமாகவும் உள்ளது. திருக்குறளைக் கீதையோடு ஒப்பிட்டுப் பேசுப வர்கள் இதை உணராமல் பேசுகிறார்கள்.