பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 செத்து மடிவதே சிறப்பு அர்ச்சுனன் குழம்புகிறான். பலனை எதிர்பார்க் காதே - உனக்கு விதிக்கப்பட்ட போர்த் தொழிலைச் செய் என்று உபதேசிக்கிறான் கிருஷ்ணன். உன் கடமையைச் செய்வதால் உனக்கு மோட்ச உலகில் இடம் கிடைக்கும் என்று அதற்கு ஒரு பலனும் சொல் கிறான். ஆக ஒரு பலன் இருக்கிறது என்று காட்டா மல், அர்ச்சுனனை அவனால் வயப்படுத்த முடிய வில்லை. கீதையையும் கிருஷ்ணனையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒரு துறவியார் முயல் கிறார். கொலை செய்யச் சொல்லுகிறானே கிருஷ்ணன் இது நியாயமா? என்று பலர் கேட் கிறார்கள். இது நரகத்தில் தள்ளுமே என்று அஞ்சு கிறார்கள். உலக உயிர்கள் எல்லாமே ஒன்றை யொன்று கொன்று தான் வாழ்கின்றன. உலகமே ஒரு கொலைக் களமாக இருக்கிறது. கொலைக் களத் துக்குள் வந்தவன், அதாவது மனிதனாகப் பிறந்த