பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

吻舒 இதை காட்டும் பாதை வன் கொலைக்கு அஞ்சலாமா என்று கேட்கிறார் துறவியார். கீதையையும் கிருஷ்ணனையும் காப் பாற்றுவதற்காக - அருள் நெறியைத் துறக்கச் சொல்லுகின்ற இப்படிப்பட்ட துறவிகளால் நாட்டில் எப்படி அன்பு தழைத்தோங்க முடியும். காந்தி அடிகளார் கீதையைப் படித்தார். கீதை சிறந்த நூல் என்று பாராட்டினார். ஒவ்வொருவரும் கீதை படிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறி னார். ஆனால் அவர் போர் வழியை ஏற்றுக் கொள்ளவில்லை. பகைவனைக் கூட அன்பினால் அஹிம்சையினால் தான் வெல்ல முடியுமே தவிர, வன்முறையால் முடியாது என்று அவருடைய அந்த ராத்மா கூறியதை அவர் உலகுக்குக் கூறினார். ஆத்மாவைப் பற்றிப் பேசிய கண்ணனின் வன்மைப் போக்கு அந்தராத்மாவைப் போற்றிய காந்தி யடிகளாருக்கு ஒத்து வரவில்லை. ஆத்மா என்று உயிருக்குப் பெயர் வைத்தான் கிருஷ்ணன். - அந்தராத்மா என்று உள் மனத்திற்குப் பெயர் வைத்தார் காந்தியடிகள். - ஆத்மா என்ற சொல், அவரவர் விருப்பம் போல் பொருள் படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு சொல்லாய் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்தச் சட்டை வேண்டுமோ அதை அணிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.