பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்து மடிவதே சிறப்பு 61 ஆன்மீக வாதமே, எதிரியை மடக்கத்தான் பயன் படுகிறது. வேறு வகையில் உப்புக்குக் கூடப் பயன்படுவதில்லை. குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கக் செய்கி றாய். ஆதலால் எது எனக்கு நன்மை தரும் என்பதை உறுதிப் படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல். -கீதை 3 : 2 அர்ச்சுனனின் இந்த வேண்டு கோளுக்குப் பிறகு கிருஷ்ணன் சொல்லத் தொடங்கும் கர்மயோகம் பற்றிய கருத்துக்கள் மேலும் குழப்பத்தையே உண்டாக்குகின்றன. வேள்வியின் பொருட் டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் தொழில் மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால் குந்தி மகனே பற்றைக் களைந்து தொழில் செய்து கொண்டிரு. - -கீதை 3 : 9 ஒரு யாகம் நடத்துவதற்கு என்று செய்யும் தொழில் சிறப்பானதாம். வேறு தொழில்களைச் செய்யும் போது மனிதன் அவற்றில் - அவற்றின் நன்மை தீமைகளில் கட்டுண்டு போகிறானாம். ஆதலால், பலனை எதிர்பாராமல் - நன்மை தீமை களை எண்ணிப் பார்க்காமல் தொழிலைச் செய்ய வேண்டுமாம்! தொடர்ந்து யாகங்கள் செய்ய வேண்டியது பற்றி யும், யாகத்தினால் தேவர்களை மகிழ்விப்பது பற்றி யும், தேவர்களுக்குக் கொடுத்தது போக மீதியை உண்பது தான் மனிதர்களுக்கு நலம் பயக்கும் என்றும் சொல்லுகிறான்.