பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கீதை காட்டும் பாதை உயிர்கள் உணவினால் அமைகின்றனவாம். உணவு மழையினால் உண்டாகிறதாம். மழை யாகங் களால் உண்டாகிறதாம். யாகங்கள் மனிதர்களின் செயல்களால் நடக்கின்றனவாம். செயல்கள் பிரமத் திலிருந்து பிறப்பதாம். பிரமம் அமிர்தத்தில் தோன்றுவதாம். ஆதலால் யாகத்தினால் தான் பிரமம் நிலை பெற்றுள்ளதாம். உயிர்ப்பலி கொடுத்து யாகம் செய்வது சிறந்த செயல் என்றும், அதனால் தான் உலகம் ஒழுங்காக நடக்கிறது என்றும் கூறுகிறான். யாகம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை இங்கே வற்புறுத்திக் கூறுகிறான். யாகத்தில் உயிர்ப்பலி கொடுப்பதற்கு வேண்டிய செயல்கள் கண்ணனால் பாராட்டப் படுகின்றன. யாகம் தவிர மற்ற தொழில்களைச் செய்யும் போது அத்தொழிலின் பலனில் பற்று வைக்காமல்இலாப நஷ்டத்தை எதிர் பாராமல் தன் தன் குலத் தொழிலைச் செய்து வர வேண்டும் என்று வற்புறுத்து கிறான். கண்ணன் இங்கே தன்னை மிக உயர்ந்த கடவு ளாகப் பாவித்துக் கொண்டு பேசுகிறான். கடவு ளாகிய அவன் தொடர்ந்து தொழிலைச் செய்யாமல் விட்டுவிட்டால் எல்லாரும் அவனைப் பின்பற்றித் தொழில் செய்யாமல் இருந்து விடுவார்களாம். அத னால் மக்கள் எல்லோரும் அழிந்து போவார்களாம்.