பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்து மடிவதே சிறப்பு 63 அவன் தொடர்ந்து தொழில் செய்வது போலவே எல்லாரும் தத்தம் தொழிலைச் செய்து வர வேண்டு மாம். அதுவும் பலனை எதிர் பாராமல் செய்ய வேண்டுமாம். பலனை எதிர் பார்த்துச் செய்பவன் மூடனாம்; எதிர் பாராமல் செய்பவனே ஞானியாம். இப்படிப்பட்ட தவறான வழிகளையே கீதையில் தொடர்ந்து கண்ணன் கூறி வருகிறான். நச்சுத் தன்மை வாய்ந்த இன்னொரு கருத்தை இங்கே கண்ணன் கூறுகிறான். நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும். குணமற்றதெனினும் சுய தர்மமே சிறந்தது. சுய தர்மத்தில் இறந்து விடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக் கிடமானது. -கீதை 5 : 35 சாதி முறையைக் கட்டிக் காப்பதற்காக இந்த உபதேசத்தைச் செய்கிறான். வேறு சாதிக்காரனுடைய தொழிலில் தேர்ச்சி பெற்று அதை நன்றாகப் பலனுடையதாகச் செய் தாலும் அது கேடு தருமாம். தன் சாதித் தொழிலால் பலன் இல்லாவிட்டாலும், அதனால் சாவே வந்தா லும் அதையே தொடர்ந்து செய்து சாவது சிறந்த தாம். இவ்வாறு மோசமான உபதேசத்தைகண்ணனைத் தவிர வேறு எவரும் சொல்லத் துணிய மாட்டார்கள். வருணாசிரமத்தையும் சாதித்தீயை யும் காப்பாற்றவே இவ்வளவு மோசமான கருத்தைக் கீதை சொல்லுகிறது.